2020-21 ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்தியப் புள்ளி விவர அலுவலகம் (Central Stastical Office – CSO) வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலைக்கு முன்பு, 2020 – 21 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியாவின் GDP ஆனது 1.6% வளர்ந்தது.
இருப்பினும் அனைத்துக் காலாண்டுகளையும் சேர்த்து மொத்தமாக GDPயின் அளவு 7.3% சரிந்துள்ளது.