நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பணமதிப்பிழப்பு பற்றிய மத்திய அரசின் கணிப்பு 3 முதல் 3.5 சதவீதமாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.
2022-23 நிதியாண்டிற்கான உண்மையான GDP வளர்ச்சிக்கான அரசின் கணிப்பு 7.6 -8.1 சதவிகிதம் என்ற வரம்பில் உள்ளது.
அதே நேரத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையில் 2023 நிதியாண்டிற்கான பெயரளவு GDP வளர்ச்சி விகிதம் 11.1 சதவிகிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி பணமதிப்பிழப்பானது 'மறைமுகமான பண மதிப்பு இழப்பு' என்றும் அழைக்கப்படுகிறது.
இது பொதுவான விலையில் ஏற்படும் பணவீக்கத்தின் அளவீடு ஆகும்.
இது 'பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு' என வரையறுக்கப்படுகிறது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தி பணமதிப்பிழப்பு பற்றிய தகவல்களை வெளியிடுகிறது.