TNPSC Thervupettagam

மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு மாற்றம்

February 18 , 2018 2325 days 829 0
  • நாட்டில் உண்டாகும் பொருளாதார மாற்றங்களை உள்ளெடுத்து அவற்றை (Accommodate and factor) காரணிப்படுத்துவதற்காக வேண்டி நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index-CPI), தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production-IIP) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross domestic product-GDP) போன்றவற்றின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை (Base year) இந்திய அரசு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.
  • நாட்டின் பொருளாதார வெளியீட்டைக் (Economic Output) கணக்கிடுவதற்கு 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக (Base year) அரசு பயன்படுத்தி வருகிறது.
  • GDP, IIP போன்றவற்றின் கணக்கீட்டிற்கு 2017-2018 ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகவும், சில்லறை பணவீக்கம் (Retail Inflation) அல்லது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) கணக்கீட்டிற்கு 2018 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகவும் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation) முன்மொழி வழங்கியுள்ளது.
  • இதுவரை மதிப்பீடு செய்யப்படாமல் இருந்து வந்த காரணியான , சந்தையிடப்படாத சமூக மற்றும் பொருளாதார செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை (non-marketed social and economic activities), மதிப்பிடுவதற்காக நேர பயன்பாட்டு கணக்கெடுப்பு ஒன்றை (Time Use Survey) அறிமுகம் செய்யவும் அமைச்சகம் முன்மொழிவு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்