TNPSC Thervupettagam

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநில அரசுகளின் பங்களிப்பு

September 25 , 2024 3 days 76 0
  • தென் மாநிலங்கள் ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு மற்றும் தனி நபர் வருமானத்தில் பங்களிப்பு ஆகியவற்றில் வட மாநிலங்களை விட மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளன.
  • கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து மிகப் பெரியப் பங்களிப்பாளராகத் தொடர்ந்து திகழ்வதாக இருப்பினும் முன்னதாக 15 சதவீதமாக இருந்த அம்மாநிலத்தின் பங்கானது தற்போது 13.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப் படி தேசியச் சராசரியில் 150.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 1960-61 ஆம் ஆண்டில் 14 சதவீதமாக இருந்த உத்தரப் பிரதேசத்தின் பங்கு ஆனது சுமார் 9.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான பீகார், வெறும் 4.3 சதவீதப் பங்களிப்பினையே வழங்குகிறது.
  • 1960-61 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.5 சதவீதப் பங்குடன் முதல் இடத்தில் இருந்த மேற்கு வங்காளமானது தற்போது 5.6 சதவீதத்தை மட்டுமே கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்