மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநில அரசுகளின் பங்களிப்பு
September 25 , 2024 61 days 124 0
தென் மாநிலங்கள் ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு மற்றும் தனி நபர் வருமானத்தில் பங்களிப்பு ஆகியவற்றில் வட மாநிலங்களை விட மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளன.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து மிகப் பெரியப் பங்களிப்பாளராகத் தொடர்ந்து திகழ்வதாக இருப்பினும் முன்னதாக 15 சதவீதமாக இருந்த அம்மாநிலத்தின் பங்கானது தற்போது 13.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப் படி தேசியச் சராசரியில் 150.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
1960-61 ஆம் ஆண்டில் 14 சதவீதமாக இருந்த உத்தரப் பிரதேசத்தின் பங்கு ஆனது சுமார் 9.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான பீகார், வெறும் 4.3 சதவீதப் பங்களிப்பினையே வழங்குகிறது.
1960-61 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.5 சதவீதப் பங்குடன் முதல் இடத்தில் இருந்த மேற்கு வங்காளமானது தற்போது 5.6 சதவீதத்தை மட்டுமே கொண்டு உள்ளது.