TNPSC Thervupettagam

மொத்த உள்நாட்டுப் பருவநிலை ஆபத்து அறிக்கை

February 22 , 2023 642 days 346 0
  • கிராஸ் டிபென்டென்சி முன்னடுப்பு (XDI) என்ற ஒரு அமைப்பின் மூலம் இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
  • உலகில் உள்ள 50 பிராந்தியங்களில் ஒன்பது பிராந்தியங்கள், இந்தியாவில் காணப் படும் பலவீனமான உள்கட்டமைப்பு வீழ்ச்சியினால் அதிகளவுப் பருவநிலை அபாயத்தை எதிர்கொள்கிறது.
  • பீகார் (22வது இடம்), உத்தரப் பிரதேசம் (25வது), அசாம் (28வது), ராஜஸ்தான் (32வது), தமிழ்நாடு (36வது), மகாராஷ்டிரா (38வது), குஜராத் (48வது), பஞ்சாப் (50வது) மற்றும் கேரளா (52வது) ஆகியவை நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் ஆகும்.
  • கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான பருவநிலை சார்ந்த இடர்களுக்கு உள்ளாகக் கூடிய மாநிலங்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடாக சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, உலகளவில் உள்ள 80% மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கை மையங்கள் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
  • முதல் 100 இடங்களில் அமெரிக்காவின் 18 பிராந்தியங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்