TNPSC Thervupettagam

மொத்த கருவுறுதல் விகிதத்தின் நிலை - லான்செட் அறிக்கை

April 15 , 2024 95 days 226 0
  • 2050 ஆம் ஆண்டில், ஐந்து இந்தியர்களில் ஒருவர் முதியோராக இருப்பார், அதே சமயம் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு இளையோர்கள் குறைவாகவே இருப்பார்கள் அன்று அறிக்கை கூறுகிறது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள முதியோர்களின் பங்கு 20 சதவீதத்திற்கும் அதிகமாக, அதாவது ஒரு ஐந்து பேரில் ஒருவர் என்ற வீதத்தில் இருக்கும்.
  • இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) - ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை – மீள முடியாத வகையில் 1.29 ஆகக் குறைந்து வருகிறது என்ற நிலையில் இது 2.1 என்ற ஈடுநிலை கருவுறுதல் விகிதத்தினை விட மிக  குறைவு ஆகும்.
  • 1950 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சுமார் ஐந்து குழந்தைகள் என்ற வீதத்தில் இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் ஆனது, கடந்த 70 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து 2021 ஆம் ஆண்டில் 2.2 குழந்தைகள் என்ற வீதத்தில் உள்ளது.
  • இந்தியாவில், 1950 ஆம் ஆண்டில் 6.18 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் ஆனது 1980 ஆம் ஆண்டில் 4.60 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 1.91 ஆகவும் குறைந்தது.
  • 2050 ஆம் ஆண்டில், 204 நாடுகளில் 155 நாடுகள் (உலகின் 76 சதவீத நாடுகள்) ஈடுநிலை கருவுறுதல் வீத நிலையை விடக் குறைவாகவே இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்