TNPSC Thervupettagam

மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி – உத்தரகாண்ட்

July 31 , 2021 1122 days 540 0
  • உத்தரகாண்ட் அரசானது தனது மாநிலத்தின் இயற்கை வளங்களின் மதிப்பீட்டினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரிசையில் மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தியாக மதிப்பிட உள்ளதை அறிவித்துள்ளது.
  • மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தியானது ஒரு பகுதியின் சூழ்நிலை செயல்பாடுகளைக் கணக்கிடும் ஒரு மதிப்பீட்டு முறையாகும்.
  • இது ஒரு குறிப்பிட்டப் பகுதியின் மக்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பினால் (காடுகள், நீர்நிலைகள், பெருங்கடல்கள் போன்ற) வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவைகளின் ஒட்டு மொத்த வருடாந்திர மதிப்பினைக் குறிக்கிறது.
  • இது சுற்றுச்சூழல் அமைப்பின் சேவைகளின் மீதான மதிப்பினை ஒரு ஒற்றை நாணயப் பதின்ம முறையில் தருகிறது.
  • சுற்றுச்சூழல் அமைப்பின் சேவைகள்எனும் சொற்கூறானது சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கல்வி நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில் 1981 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • சுற்றுச்சூழல் அமைப்பின் சேவைகள் என்பது சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்கள் பெறும் பயன்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்