மொத்த சேர்க்கை விகிதத்தில் மூன்றாவது இடம்: தமிழ்நாடு
October 1 , 2019 1886 days 1239 0
உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தின் (Gross Enrolment Ratio - GER) அடிப்படையில் நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களிடையே சிறப்பாகச் செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது.
GER ஆனது 18 - 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்காகக் கணக்கிடப்படுகின்றது.
உயர் கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பு 2018-19இன் சமீபத்திய அறிக்கையின் படி, தமிழ்நாட்டின் GER விகிதம் 49% ஆக உள்ளது.
அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் / ஒன்றியப் பிரதேசம் : சிக்கிம் (53.9%), சண்டிகர் (50.6%).
தமிழ்நாட்டின் தனித்துவமான நிலை
தமிழ்நாட்டில் GER ஆனது 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8.6% அதிகரித்துள்ளது.
உயர் கல்வியில் GER ஆனது கேரளாவில் 37 சதவிகிதமாகவும் ஆந்திராவில் 32.4 சதவிகிதமாகவும் தெலுங்கானாவில் 36.2 சதவிகிதமாகவும் கர்நாடகாவில் 28.8 சதவிகிதமாகவும் இருக்கின்றது.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் GER இல் 32% மற்றும் 20.4%ஐக் கொண்டுள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் உயர் கல்வியில் 50% GERஐ அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் தமிழ்நாடு ஏற்கனவே இந்த இலக்கை அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்கள் GER விகிதமானது 49.8 சதவிகிதமாகவும் பெண்கள் விகிதம் 48.3% சதவிகிதமாகவும் உள்ளது.
இதேபோல் மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் GER விகிதமானது 41.6 சதவிகிதமாகவும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின வகுப்பினரின் GER விகிதமானது 37.8 சதவிகிதமாகவும் உள்ளது.