TNPSC Thervupettagam

மொத்த மதிப்பு கூட்டப்பட்ட முறையிலிருந்து மீண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறைக்கு மாற்றம்

April 11 , 2018 2421 days 832 0
  • இந்திய ரிசர்வ் வங்கி உலகத்தின் சிறந்த முறைகளை உதாரணம் காட்டி, வளர்ச்சி மதிப்பீடுகளை சரியான முறையில் வழங்கிட மொத்த மதிப்பு கூட்டப்பட்ட முறையிலிருந்து (Gross Value Added - GVA) மீண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான முறைக்கு (Gross Domestic Product - GDP) திரும்பியுள்ளது.
  • மொத்த மதிப்புக் கூட்டப்பட்ட முறையானது உற்பத்தியாளர் தரப்பில் அல்லது விநியோகத் தரப்பில் இருந்து நாட்டின் பொருளாதார செயல்பாடுகளின் நிலையைத் தருகின்றது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறை நுகர்வோர் தரப்பில் அல்லது தேவை ஏற்படும் தரப்பில் இருந்து உண்மை நிலையை பிரதிபலிக்கின்றது.
  • உலகளவில் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதார செயல்திறன் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையிலேயே மதிப்பிடப்படுகின்றது.
  • அரசு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து வளர்ச்சி மதிப்பீடுகளை மொத்த மதிப்புக் கூட்டப்பட்ட முறையின் அடிப்படையில் கணக்கிட ஆரம்பித்திருந்தது. மேலும் அடிப்படை ஆண்டை, ஜனவரி மாதத்திலிருந்து 2018ம் ஆண்டிற்கு மாற்றி இருந்தது.
  • மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office - CSO) கூட 2018ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியில் இருந்து பொருளாதார நடவடிக்கைகளை கணக்கிட முக்கிய மதிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்