TNPSC Thervupettagam

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2023-24

October 25 , 2024 28 days 116 0
  • தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஆனது, நிலையான (அடிப்படை ஆண்டின் விலையில்) விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 8.13% ஆகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 8.23% ஆகவும் வளர்ச்சியடைந்தது.
  • நடப்பாண்டு விலையிலான வளர்ச்சி விகிதங்கள் ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 15.48% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 13.71% ஆகவும் இருந்தது.
  • அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் நிலையான விலையில் 6.99% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.15% ஆகவும் இருந்தது.
  • நடப்பாண்டு விலையில், இந்த விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 14.21% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.60% ஆகவும் இருந்தது.
  • மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் நடப்பாண்டு விலையில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில்  நிலையான விலையில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை விஞ்சி, தமிழ்நாடு மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டின் பணவீக்க வீதமானது 2022-23 ஆம் ஆண்டில் 5.97% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 5.37% ஆகவும் இருந்தது.
  • அகில இந்தியப் பணவீக்க விகிதம் ஆனது இந்த காலக் கட்டங்களில் முறையே 6.65% மற்றும் 5.38% ஆக இருந்தது.
  • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 1,66,590 ரூபாயாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 1,79,732 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆனது நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 99,404 ரூபாயாகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 1,06,744 ரூபாயாகவும் இருந்தது.
  • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஆனது இரண்டு ஆண்டுகளிலும் தேசிய தனிநபர் வருமானத்தை விட 1.68 மடங்கு அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்