மொத்த வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள மாநிலம்
March 1 , 2024
300 days
434
- 2023 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் மாதக் காலாண்டில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 23,859 அலகுகள் முச்சக்கர வாகனங்கள் விற்பனையானது.
- அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (20,495), குஜராத் (19,743) மற்றும் பீகார் (14,955) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
- அதே போல், இரு சக்கர வாகனப் பிரிவில், மொத்தம் 6,73,962 அலகுகள் அளவிற்கு விற்பனையானதுடன் அதில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (5,15,612), மத்தியப் பிரதேசம் (3,35,478) மற்றும் தமிழ்நாடு (3,24,918) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
- இருப்பினும், பயணியர் வாகன விற்பனையில், 1,21,030 அலகுகள் விற்பனையானதை அடுத்து மகாராஷ்டிராவில் அதிகபட்ச வாகன விற்பனை பதிவாகியுள்ளது.
- அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (1,01,568), குஜராத் (85,599) மற்றும் கர்நாடகா (71,549) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
- வர்த்தகப் பயன்பாட்டு வாகனப் பிரிவிலும், 31,055 அலகுகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (23,083), குஜராத் (20,391) மற்றும் கர்நாடகா (16,966) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
Post Views:
434