ஐந்தாவது தேசியக் குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் (2019–21) படி, இந்தியாவானது 2.0 என்ற மொத்த கருவுறுதல் விகிதத்தினை (TFR) எட்டியுள்ளது.
இது தேசிய மக்கள் தொகைக் கொள்கை 2000 மற்றும் 2.1 என்ற TFR விகிதத்தினை இலக்காக கொண்ட தேசிய சுகாதார கொள்கை 2017 ஆகியவற்றின் கீழ் நிர்ணயிக்கப் பட்ட இலக்குகளை அடைந்துள்ளது.
மொத்தக் கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
இது ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் என்ற அடிப்படையில் மதிப்பிடப் படுகிறது.
மொத்த கருவுறுதல் விகிதம் ஆனது, 1950 ஆம் ஆண்டுகளில் 6 அல்லது அதற்கும் மிக அதிகமாக இருந்தது.