TNPSC Thervupettagam

மொத்தக் கருவுறுதல் விகிதம் – கேரளா

December 11 , 2023 384 days 323 0
  • கல்வி கற்ற பெண்களின் மத்தியிலான மொத்தக் கருவுறுதல் விகிதம் ஆனது இந்தியாவிலேயே கேரளாவில் மட்டுமே அதிகமாக உள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டு மாதிரிப் பதிவு அமைப்பு புள்ளியியல் அறிக்கை மூலம் வெளிப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது, கல்வி கற்காதப் பெண்களை விட, கல்வி கற்ற பெண்கள் தான் குறைவான குழந்தைகள் கொண்டுள்ளனர் என்ற பொதுவான அனுமானத்தை கேரளா உடைத்து உள்ளது.
  • ‘கல்வியறிவு பெற்ற’ பெண்களிடையே 1.5 என்ற கருவுறுதல் விகிதமும், கல்வியறிவு அற்றவர்களிடையே 0.2 என்ற கருவுறுதல் விகிதமும் பதிவாகியுள்ளது.
  • இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து கேரளாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.8 ஆகும்.
  • தேசிய அளவில், ‘கல்வியறிவு அற்ற' பெண்களின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 3.1 ஆக உள்ள நிலையில் இது ‘கல்வியறிவு கொண்ட குழுவை விட (1.9) மிக அதிகம் ஆகும்.
  • மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண்ணின் மகப்பேறு காலத்தில் (15-49 வயது) பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்