மத்தியப் பிரதேசத்தில் மொரண்ட்-கஞ்சல் என்ற நீர்ப்பாசனத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆனது புலிகள் நடமாடும் வனப் பகுதிகளை மூழ்கடிக்கக் கூடும் என்று தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) எச்சரித்துள்ளது.
இந்தத் திட்டத்தில், மாநிலத்தின் ஹோஷங்காபாத், பெதுல், ஹர்தா மற்றும் காண்ட்வா மாவட்டங்களில் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதற்காக மொரண்ட் மற்றும் கஞ்சல் நதிகளில் இரண்டு அணைகள் கட்டப்பட உள்ளது.
இந்த அணை மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளின் கட்டுமானப் பணிகளானது, 644 குடும்பங்களை இடம் பெயர்க்கும் என்பதோடு இதில் வாழ்வாதாரத்திற்காக இந்தக் காட்டைச் சார்ந்துள்ள 604 பழங்குடியினக் குடும்பங்கள் அடங்கும்.
5.75 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதால் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நீர்த் தேக்கத்தின் முழு நீர் மட்டத்தினால் பாதிக்கப்படும்.