TNPSC Thervupettagam

மொராக்கோவின் 2-வது புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்

November 23 , 2018 2195 days 644 0
  • மொராக்கோ நாடானது தனது முகமது VI-B என பெயரிடப்பட்ட இரண்டாவது புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
  • இது தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள கவுரோ என்ற நகரத்தில் உள்ள கயானா விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து ஏரியன் ஸ்பேஸ் வேகா ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
  • இது நவம்பர் 2017-ல் வேகா ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட மொராக்கோவின் முதல் செயற்கைக் கோளான மொகமது 6-A-ன் இரட்டையாக ஒரே சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
  • புவி கண்காணிப்பிற்கான மொராக்கோவின் இரண்டு செயற்கைக் கோள்கள் தொகுப்பின் ஏவுதலை இது பூர்த்தி செய்துள்ளது.
  • இந்த செயற்கைக் கோளானது தாலேஸ் அலெனியா விண்வெளி (Thales Alenia Space) மற்றும் வானூர்தி பாதுகாப்பு & விண்வெளி (Airbus Defence & Space) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • ஏரியன் ஸ்பேஸ் 1980-ல் துவங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனமாகும். இது விண்வெளித் துறையில் உலகின் முதல் வணிக ரீதியிலான சேவை வழங்குநர் நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்