மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளியானது, அட்லஸ் மலைப் பகுதியில், குறிப்பாக அல்-ஹவுஸ் எனுமிடத்தில் அமைந்தது.
12,000க்கும் அதிகமானோரைப் பலி வாங்கிய 1960 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அகாடிர் நகரை அடுத்து, மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.
சமீபத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆனது, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலக் கட்டத்தில் மொராக்கோவைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.