இந்திய ரிசர்வ் வங்கியின் 2016-17ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்கள் மற்றும் இந்திய நேரடி முதலீட்டு நிறுவனங்களின் சொத்துகள் மீதான கணக்கெடுப்பின் படி (Census on foreign Liabilities and Assets of Indian Direct Investments Companies 2016-17) இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய மூல ஆதாரமாக மொரிஸியஸ் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இக்கணக்கெடுப்பின் படி, மொரிஸியஸை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து அடுத்த இரு இடங்களில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவில் சந்தை விலையில் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் பாதி அளவு உற்பத்தி துறையில் மேற்கொள்ளப்படுகின்றது.
தகவல் தொழிற்நுட்பம், தொலைத் தொடர்பு சேவைகள், நிதி மற்றும் காப்பீடு செயல்பாடுகள் போன்றவை அந்நிய நேரடி முதலீட்டைக் கவரும் பிற முக்கிய துறைகளாகும்.