TNPSC Thervupettagam

மொரிசியஸ் – அந்நிய நேரடி முதலீடு

January 21 , 2018 2371 days 794 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் 2016-17ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்கள் மற்றும் இந்திய நேரடி முதலீட்டு நிறுவனங்களின் சொத்துகள் மீதான கணக்கெடுப்பின் படி (Census on foreign Liabilities and Assets of Indian Direct Investments Companies 2016-17) இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய மூல ஆதாரமாக மொரிஸியஸ் உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இக்கணக்கெடுப்பின் படி, மொரிஸியஸை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.  அவற்றைத் தொடர்ந்து  அடுத்த இரு இடங்களில்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்  ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தியாவில் சந்தை விலையில் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் பாதி அளவு உற்பத்தி துறையில் மேற்கொள்ளப்படுகின்றது.
  • தகவல் தொழிற்நுட்பம், தொலைத் தொடர்பு சேவைகள், நிதி மற்றும் காப்பீடு செயல்பாடுகள் போன்றவை அந்நிய நேரடி முதலீட்டைக் கவரும் பிற முக்கிய துறைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்