மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அவரது கட்சி (பாஜக) 163 இடங்களை வென்றது.
அம்மாநிலத்தில் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜகதீஷ் தேவ்தா ஆகிய இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர்.
மோகன் யாதவ் ஒரு இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சார்ந்த தலைவர் மற்றும் உஜ்ஜைன் தெற்குப் பகுதியிலிருந்து மூன்று முறை பாஜக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் ஆவார்.
இவர் முன்பு மத்தியப் பிரதேசத்தின் உயர்கல்வி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.