மோச்சா புயல் ஆனது வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரின் சிட்வே ஆகியவற்றுக்கு இடையே கரையைக் கடந்தது.
மோக்கா என உச்சரிக்கப் படும் 'மோச்சா' என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்தது.
காபி உற்பத்திக்குப் பெயர் பெற்ற செங்கடல் துறைமுக நகரத்தின் பெயரால் இந்தப் புயலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நகரமானது அந்தப் பெயரை தனது பிரபல பானமான கஃபே மோச்சா என்பதற்கும் அளித்துள்ளது.
சித்ர் என்ற புயலுக்குப் பிறகு, வங்காளதேசத்தினைத் தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்தப் புயல் மோச்சா ஆகும்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்காளதேசத்தின் தெற்கு கடற்கரையைத் தாக்கிய சித்ர் புயல் 3,000க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பலி வாங்கி, பில்லியன் டாலர் அளவில் சேதத்தை ஏற்படுத்தியது.
2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் புயல் மியான்மரின் ஐராவதி டெல்டாவினை சேதப் படுத்தி, குறைந்த பட்சம் 138,000 பேரின் உயிரைப் பலி வாங்கியது.