TNPSC Thervupettagam

மோதலால் உருவான உலகின் பழமையான பள்ளம்

March 14 , 2025 17 days 85 0
  • மேற்கு ஆஸ்திரேலியப் பகுதியில் ஒரு விண்கல் மோதலால் உருவான உலகின் மிகவும் பழமையான பள்ளத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கி, பில்பாரா பகுதியில் வட துருவ டோம் தளத்தினை உருவாக்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பு, மோதலால் உருவான மிகப் பழமையான பள்ளமாகக் கருதப்பட்ட பள்ளமானது, 2.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக அறியப்பட்டது.
  • அந்த இடத்தில் உள்ள பாறைச் சிதறல்கள், ஒரு விண்கல் ஆனது மணிக்கு 36,000 கிலோ மீட்டர் வேகத்தில் அந்தப் பகுதியில் மோதிய போது உருவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்