மோரன் மற்றும் மோட்டாக் சமூகத்தைச் சேர்ந்த மாணாக்கர், அசாமில் தங்களுக்குப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்குவதில் பத்தாண்டு காலமாக நிலவி வரும் தாமதத்தினை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) என வகைப்படுத்தப்பட்டுள்ள தாய் அஹோம்கள், கோச் ராஜ்போங்ஷிகள், சூடியாக்கள் மற்றும் ஆதிவாசிகள் ஆகிய பிரிவினரும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அந்தஸ்துக்கான கோரிக்கையினை எழுப்பியுள்ளனர்.
மோரன் என்பது அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினக் குழுவாகும்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய சமூகமான தாய் அஹோம்ஸ் ஆனது அஹோம் பேரரசுடன் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது.
கோச் ராஜ்போங்ஷிஸ் மக்கள் அசாம் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆதிவாசிகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் பழங்குடியினர் ஆவர்.