இந்திய நாட்டினை பல்வேறு வானிலை சூழல்களுக்கு ஏற்ற நிலையில் மிகவும் நன்கு தயாரானதாகவும் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற வகையிலான ஒரு தேசமாக அதனை மாற்றுவதற்காக ‘மௌசம் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் தொடக்கமானது, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 150வது ஸ்தாபன தினக் கொண்டாட்டங்களை ஒட்டி நடைபெற்றது.
வானிலை அமைப்புகளில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தினை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மிகக் குறுகிய மற்றும் நடுத்தர வரம்பிலான முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதிலும், கடுமையான வானிலை நிகழ்வுகளுக்கான தயார்நிலையை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இது முன்னறிவிப்புகளின் துல்லியத் தன்மையினை மேலும் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கிறது என்பதோடு மேலும், பஞ்சாயத்து அமைப்புகள் நிலை வரையில் 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாக கணிப்புகளை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.