சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருந்த வாஷிங்டனின் மிகப்பெரிய எரிமலையான மௌண்ட் ஆடம்ஸ் எரிமலையின் நில அதிர்வு நடவடிக்கைகளில் சமீபத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
கடந்த 12,000 ஆண்டுகளில் ஆடம்ஸ் எரிமலையானது நான்கு எரிமலைக் குழம்பு வெளியேற்றங்களை உருவாக்கியுள்ளது.
பாறை, சாம்பல் மற்றும் பனிக்கட்டிகளால் ஆன எரிமலை சேற்றுப்பாய்வு (லஹார்ஸ்) ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிகப்பெரிய அபாயமாக உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஆடம்ஸ் மலையிலிருந்து வெளிப்பட்ட முந்தைய எரிமலை சேற்றுப்பாய்வு நிகழ்வுகள் ஆனது சுமார் 6,000 மற்றும் 300 ஆண்டுகளுக்கு முன்பு மிக கணிசமான தொலைவுகளுக்குப் பரவின.
இந்த சேற்றுப் பாய்வுகளின் சாத்தியமான அபாயங்கள் காரணமாக, மௌண்ட் ஆடம்ஸ் எரிமலை ஒரு "அதிக-அச்சுறுத்தல்" கொண்ட எரிமலையாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.