இது ஹவாயில் உள்ள மௌனா லோவா ஆய்வகத்திலிருந்துப் பெறப்பட்ட பல்வேறு அளவீடுகளின் முன்னறிவிப்பாகும்.
2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு அளவுகள் ஆனது 429.6 ppm ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது 2 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பதிவாகாத மிக அதிகபட்ச வளிமண்டல CO2 செறிவாக இருக்கும்.
2024-2025 ஆம் ஆண்டுகளில் இது தோராயமாக 2.26 ppm அதிகரித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 3.58 ppm என்ற வருடாந்திர அதிகரிப்பு ஆனது, கணிக்கப்பட்ட 2.84 ppm அதிகரிப்பை விட அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட காட்டுத்தீ 7.3 பில்லியன் டன் CO2 வாயுவினை வெளியேற்றியது.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியாகும் உலகளாவிய கார்பன் வெளியேற்றம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டியதோடு மேலும் இது 2024 ஆம் ஆண்டில் 41.6 பில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.