TNPSC Thervupettagam

மௌரி ஹாக்கா

January 12 , 2024 188 days 419 0
  • நியூசிலாந்து நாட்டின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஹனா- ரவ்ஹிதி மைபி கிளார்க்கே கவர்ச்சிகரமாக வயப்படுத்தும் வகையிலான தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
  • அவர் தனது பூர்வீக அடையாளங்களைக் கௌரவிக்கும் வகையில் ‘மௌரி ஹாக்கா’ என்பதினை நிகழ்த்தி தனது முதல் உரையை ஆற்றினார்.
  • 21 வயதான மௌரி சமூகத்தைச் சேர்ந்த ஹனா-ரவ்ஹிதி மைபி கிளார்க்கே, 170 ஆண்டுகளில் மிகவும் இளம் பாராளுமன்ற உறுப்பினராக வரலாறு படைத்தார்.
  • மௌரி இனத்தவர் கிழக்கு பாலினேசியாவிலிருந்து குடியேறிய நியூசிலாந்தின் பூர்வீக பாலினேசிய மக்கள் ஆவர்.
  • அவர்கள் 1320 மற்றும் 1350 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பல கட்டத்திலான படகுப் பயணங்களின் மூலமாக நியூசிலாந்தை வந்தடைந்தனர்.
  • அவர்கள் நியூசிலாந்தில் உள்ள ஐரோப்பிய நியூசிலாந்தர்களுக்குப் பிறகு அங்குள்ள இரண்டாவது பெரிய இனக்குழு ஆவர்.
  • மொத்த மக்கள்தொகையில் மூன்று சதவீதத்தைக் கொண்டுள்ள மொத்த மௌரி இனத்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினரால் மௌரி மொழி பேசப்படுகிறது.
  • ஹாக்காவின் பாரம்பரிய மௌரி என்ற நிகழ்ச்சியானது, அந்த நாட்டின் அனைத்து நியூசிலாந்தர்களுக்குமான பெருமைக்குரிய நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்