TNPSC Thervupettagam

யானை எச்சரிக்கை ஒலிக் கருவி திட்டம் - ஒடிசா

June 30 , 2022 752 days 349 0
  • ஒடிசாவில் உள்ள தென்கனல் வனத்துறையானது, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தானியங்கு எச்சரிக்கை ஒலிக் கருவிகளைப் பொருத்த திட்டமிட்டுள்ளது.
  • விபத்துகளில் இருந்து யானைகளைப் பாதுகாப்பது மற்றும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது இதன் நோக்கமாகும்.
  • ந்தத் திட்டத்தின் கீழ், யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை ஒலிக்கருவி பொருத்தப்பட்ட கோபுரம் அமைக்கப்படும்.
  • இந்த எச்சரிக்கை ஒலிக்கருவி பொருத்தப்பட்ட கோபுரம் ஆனது தென்கனல்-அனுகுல் தேசிய நெடுஞ்சாலை 55 என்ற ஒரு நெடுஞ்சாலையினை ஒட்டி, சோதனைமுறை அடிப்படையில் அமைக்கப் படும்.
  • இந்த நுண்ணுணர்வுக் கருவிகள் அடிப்படையிலான எச்சரிக்கை ஒலிக்கருவிகள், யானைகள் சாலையைக் கடக்கும் போது அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகன ஓட்டுநர்களை எச்சரிப்பதற்காக ஒலிக்கத் தொடங்கும்.
  • யானைகள் அதன் அருகில் வந்தவுடன் எச்சரிக்கை ஒலிக்கருவி ஒலித்து சிவப்பு விளக்கு எரியும்.
  • கபிலாஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில் யானை கடந்து செல்லும் பாதைத் திட்டமும் இதன்படி செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்