TNPSC Thervupettagam

யானை எண்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ் வைரஸ்

December 11 , 2023 220 days 162 0
  • பரேலி நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் - இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IVRI) ஆனது, சமீபத்தில் யானை எண்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ்வைரசின் (EEHV) உள் வகைகளின் துல்லியமான நிலையை கண்டறிந்துள்ளதோடு அதன் உள் வகைகள் இந்தியாவில் உள்ள ஆசிய யானைகள் மத்தியில் பரவி இருப்பதையும் கண்டறிந்துள்ளது.
  • ஒரு வகை ஹெர்பெஸ் வைரசான EEHV என்பது இளம் ஆசிய யானைகளில் மிகவும் ஒரு ஆபத்தான இரத்தக்கசிவு நோயை ஏற்படுத்தும்.
  • இது ஹெர்பெஸ்விரிடே குடும்பத்தினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்படும் ஈரிழைகள் கொண்ட டிஎன்ஏ வைரஸ் ஆகும்.
  • பெரும்பாலான யானைகளும் இந்த வைரசினைப் பரப்புகின்றன.
  • EEHV வைரஸ் செயல்பாடு தூண்டப்பட்டால், யானையின் உடலினுள் அதிகளவில் இரத்தப் போக்கு (வெளிப்படையாக தெரிவதில்லை) ஏற்பட்டு உயிரிழக்கும்.
  • இந்த நோய் என்பது பொதுவாக 28 முதல் 35 மணிநேரம் என்ற குறுகிய காலப்போக்கில் உயிரினைப் பறிக்கும் அளவிற்கு ஆபத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்