யானைகளின் எண்ணிக்கை குறித்த ஒத்திசைவு மதிப்பீடு 2023 அறிக்கை
August 12 , 2023 472 days 246 0
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்த ஒரு ஒத்திசைவு மதிப்பீட்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் 2,961 யானைகள் உள்ளன.
இந்த எண்ணிக்கையானது, 2017 ஆம் ஆண்டில் 2,761 ஆக பதிவான யானைகளின் எண்ணிக்கையை விட 200 அதிகமாக உள்ளது.
26 வனப் பிரிவுகளில், முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் வளங்காப்பகத்தின் மசினகுடி கோட்டம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகத்தின் ஹாசனூர் கோட்டம் ஆகியவை உள்ளன.
ஐந்து யானைகள் வளங்காப்பகங்களில், நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலை யானைகள் வளங்காப்பகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் காணப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து அகத்தியமலை யானைகள் வளங்காப்பகம், நிலாம்பூர் அமைதிப் பள்ளத்தாக்கு - கோவை யானைகள் வளங்காப்பகம் மற்றும் பெரியார் யானைகள் வளங்காப்பகம் ஆகியவை உள்ளன.
2023 ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பின் படி, மொத்த யானைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த யானைகள் எண்ணிக்கையானது 5,914 முதல் 6,877 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் 6,049 ஆக இருந்த கர்நாடக மாநிலத்தின் மொத்த யானைகளின் எண்ணிக்கையானது தற்போது 6,395 ஆக உயர்ந்துள்ளது.