TNPSC Thervupettagam

யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்த புல்வெளிகள் மற்றும் மரங்கள் உள்ள பகுதிகளை அடையாளம் காணுதல்

July 8 , 2021 1295 days 561 0
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்த அப்பகுதிகளின் புல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளை அடையாளம் காணுவதற்கான ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளன.
  • யானைகளுடைய வாழ்விடங்களின் புல்வெளிப் பகுதிகள் மற்றும் தீவன மரங்கள் உள்ள பகுதிகளை மீண்டும் உருவாக்கி அவற்றைச் சீரமைத்து அதன் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டத்திற்காக எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினை வனத்துறை அமைத்துள்ளது.
  • இக்குழுவானது சமீபத்தில் ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
  • அதில் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் போன்றவையும் உண்ணக் கூடிய 29 வகை புல் இனங்கள் மற்றும் 14 தீவன மர இனங்கள் அடையாளம் காணப்பட்டு தெரிவிக்கப் பட்டுள்ளன.
  • மேலும் இவற்றை வளர்ப்பதற்காக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தினுள்ளேயே ஒரு செடிகள் பண்ணை (வளர்ப்பிடம்) ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்