கர்நாடகாவில், மேற்கு கடற்கரையில் உள்ள மங்களூருவில் அமைந்துள்ள தன்னுடைய முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோலியம் இருப்பு (Strategic petroleum reserve - SPR) கிடங்கிற்கு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 2 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்களின் முதல் சரக்கினை இந்தியா பெற்றுள்ளது. SPR திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் மத்திய அரசானது மூன்று இடங்களில் மொத்தம்33 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட மூன்று நிலத்தடி கச்சா எண்ணெய் சேகரிப்பு கிடங்குகள் கட்டப்படும் என அறிவித்திருந்தது.
அம்மூன்று கிடங்குகளாவன :
விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்)
மங்களூரு (கர்நாடகா)
படூர் (கேரளா)
2017-18-ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் மத்திய அரசானது SPR திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் இரு SPR-க்கள் இரு இடங்களில் கட்டப்படும் எனத் தெரிவித்திருந்தது.
சண்டிகோல் (ஒடிஸா)
பிகானேர் (ராஜஸ்தான்)
வெளிப்புற கச்சா எண்ணெய் விநியோக ஒருமைப்பாடுகளுக்கான ஓர் பதிலெதிர்ப்பாக நாட்டின் 10 நாட்களுக்குத் தேவையான நுகர்விற்கு எரிபொருள் பாதுகாப்பை இவை வழங்கும்.
இந்த எரிபொருள் இருப்புகளானது இந்திய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோலியம் இருப்புகள் நிறுவனம் எனும் சிறப்பு பணி அமைப்பினால் பராமரிக்கப்படும். இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எண்ணெய் தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையத்திற்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமாகும்.