இந்த அறிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 98 நாடுகளில் நிகழ்ந்த காடழிப்பு குறித்தப் போக்குகளை ஆய்வு செய்தது.
2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மிகப் பெரிய எழுச்சியுடன், கடந்த 30 ஆண்டுகளில் காடுகளை அழிப்பதில் இந்தியா ஒரு மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த ஆண்டுகளில், சராசரியாக 668,400 ஹெக்டேர் காடுகளை அழிப்பதன் மூலம், பிரேசிலுக்கு அடுத்தபடியாக நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது.
இந்தோனேசியாவில் பாமாயில் பயிரிடப் பட்டதால் குறிப்பிடத்தக்க அளவு காடுகள் இழப்பு ஏற்பட்டது.
உலகளவில் கணிசமான காடழிப்புக்கு சோயாபீன் சாகுபடியும் காரணமாகும்.