ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட ஒரு மனிதாபிமான அமைப்பாகும்.
உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளையும் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுனிசெஃப் அமைப்பானது, அதன் முழுப் பெயர் 1953 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் என மாற்றப்பட்ட பிறகும் UNICEF என்ற அதன் முதல் பெயர் சுருக்கத்தினையே தொடர்ந்து பயன்படுத்தியது.
இது உலகளவில் தடுப்பூசிகளை வழங்கும் மிகப்பெரிய முகமை ஆகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து உரிமைகளும்" என்பதாகும்.