TNPSC Thervupettagam

யுனிசெஃப் – உருவாக்க தினம் - டிசம்பர் 11

December 13 , 2019 1812 days 528 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதியம் / United Nations International Children’s Emergency Fund - UNICEF)  யுனிசெஃப் அமைப்பை உருவாக்கியது.
  • 1953 ஆம் ஆண்டில், யுனிசெஃப் அமைப்பானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர அமைப்பாக மாறியது.
  • இது வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் ஆகியோருக்கு மனிதாபிமான மற்றும் வளர்ச்சிக்கான உதவிகளை வழங்குகின்றது.
  • இதன் தலைமையகமானது நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டுக் குழு மற்றும் அதன் செயற்குழுவின் உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்