TNPSC Thervupettagam

யுனிசெப் மெய்நிகர் நாணய நிதி

October 11 , 2019 1779 days 640 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமானது தற்பொழுது மெய்நிகர் நாணயத்தில்  பரிவர்த்தனைகளை மேற்கொண்ட முதலாவது ஐ.நா. அமைப்பாக உருவெடுத்துள்ளது.
  • அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் போன்ற மெய்நிகர் நாணயத்தில் நன்கொடைகளை ஏற்றுக் கொள்ளும் பல உதவி செய்யும் நிறுவனங்களுடன் யுனிசெப் இப்போது இணைகின்றது.
  • இது யுனிசெப் மெய்நிகர் நாணய நிதியை நிறுவியுள்ளது. இது பிட்காயின் மற்றும் ஈதர் போன்ற மெய்நிகர் நாணயங்களின் வடிவத்தில் நன்கொடைகளை ஏற்றுக் கொள்கின்றது.
  • மெய்நிகர் நாணயங்கள் மூலம் யுனிசெப்பிற்குப் பங்களிக்கும் முதல் நிறுவனமாக எத்தேரியம் அறக்கட்டளை இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்