TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் அமைதி பரிசு - 2022

March 3 , 2023 506 days 399 0
  • ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசினைப் பெற்றுள்ளார்.
  • 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனிக்கு வந்தடைந்த 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மற்றும் புகலிடம் நாடி வந்த நபர்களை வரவேற்று நாட்டில் இருப்பதற்கு அனுமதித்தற்காக மெர்க்கல் அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இவர் 2005 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு, அதன் பிறகு 16 ஆண்டுகள் தொடர்ந்து இப்பதவியினை வகித்தார்.
  • யுனெஸ்கோவின் ஃபெலீக்ஸ் ஹவுபெளட் பாய்க்னி அமைதிப் பரிசானது 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது அமைதிக்கு என்று குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் செயலில் உள்ள பொது அல்லது தனியார் அமைப்புகள் அல்லது நிறுவனங்களை கௌரவப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்