TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்திய விருதுகள்

November 30 , 2022 600 days 304 0
  • இந்தியாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலயா அருங்காட்சியகத்தின் மறுசீரமைப்புப் பணிகள் திட்டமானது, யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டு கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்புத் திட்டத்திற்கான ஆசிய-பசிபிக் பிராந்திய விருது விழாவில் சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்திய கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்புத் திட்டத்திற்கான விருதுகளானது 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப் படுகிறது.
  • இந்தப் பிராந்தியத்தில் பாரம்பரிய மதிப்புள்ளக் கட்டமைப்புகள் மற்றும் அந்த வகை கட்டிடங்களைப் புணரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் மாற்றியமைப்பதில் தனியார் துறையினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை மேற்கொள்ளும் முன்னெடுப்புகளை இந்த விருது அங்கீகரித்து வருகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து 4 திட்டங்கள் உட்பட, 6 நாடுகளைச் சேர்ந்த 13 திட்டங்கள் இந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப் பட்டன.
  • விருது பெற்ற மற்ற மூன்று இந்திய அமைப்புகள்
    • கோல்கொண்டா கோட்டையின் படிக்கிணறு, ஹைதராபாத் - தனித்தன்மை விருது
    • தோமகொண்டா கோட்டை, தெலுங்கானா - தகுதிசார் விருது
    • பைகுல்லா இரயில் நிலையம், மும்பை - தகுதிசார் விருது
  • ஆப்கானிஸ்தான் நாட்டின் கரிகார் பகுதியில் உள்ள தோப்தரா ஸ்தூபி மற்றும் சீனாவின் புஜியானில் உள்ள நான்சியன் புத்தக் கோவில் ஆகியவையும் 'தகுதிசார் விருதினை' பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்