TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பிராந்தியப் பதிவேட்டின் நினைவகம்

May 19 , 2024 188 days 244 0
  • ராமசரிதமனாஸ், பஞ்சதந்திரம் மற்றும் சஹ்ருதயலோக-லோகனா ஆகிய மூன்று இந்திய இலக்கியப் படைப்புகள் ஆனது யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ராமசரிதமனாஸ், 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்தியப் பக்தி இயக்கக் கவிஞர் துளசிதாஸ் அவர்களால் அவாதி மொழியில் இயற்றப்பட்ட ஒரு காவியக் கவிதை ஆகும்.
  • காஷ்மீரி மொழி அறிஞர்களான ஆச்சார்யா ஆனந்தவர்தன் மற்றும் அபினவகுப்தா ஆகியோரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சஹ்ரதயலோக-லோகனா, அதன் அழகியல் காரணமாக இப்பட்டியலில் சேர்க்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • யுனெஸ்கோ அமைப்பின் MOW திட்டம் என்பது ஆவணப் பாரம்பரியங்களை, குறிப்பாக அரிதான மற்றும் அருகி வரும் பாரம்பரியங்களைப் பாதுகாத்தல் மற்றும் அணுகுதல் மற்றும் பயன்படுத்துவதை பெரும் நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒத்துழைப்பு உத்தி ஆகும்.
  • UNESCO அமைப்பின் இணைய தளத்தின்படி, 2023 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, சர்வதேச MoW பதிவேட்டில் 494 கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
  • இருப்பினும், MoW பதிவேடு பிராந்திய மட்டங்களிலும் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்