யுனெஸ்கோ அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் கடைசியில் இவ்வெளியேற்றம் நடைமுறைக்கு வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டோடு யுனெஸ்கோ தொடர்ந்து செயல்படுவதே இந்த விலகலுக்கு காரணாமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் 1984ல் யுனெஸ்கோ அமைப்பு இரஷ்யாவிற்கு சாதகமாக உள்ளது எனக் கூறி அமெரிக்கா வெளியேறியது. பின் 2002ல் மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது.
UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization.
யுனெஸ்கோ – ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார திட்டங்களில் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உலகில் அமைதி, சமூக நீதி, மனித உரிமைகள், மற்றும் சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்துவது இதன் பொறுப்பாகும்.
யுனெஸ்கோ 195 உறுப்பினர்களை கொண்டது.
இதன் தலைமையகம் – பாரிஸ், பிரான்ஸ்
உலகம் முழுவதும் உள்ள இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரிய இடங்களை பாதுகாப்பதற்காக உலக நாடுகளை ஊக்குவிக்க “உலக பாரம்பரிய திட்டத்தை (World Heritage Mission) யுனெஸ்கோ செயல்படுத்துகிறது.
இது பாலின சமத்துவக் குறியீட்டையும் (Gender Parity Index), உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையையும் (Global Education Monitoring Report) வெளியிடுகின்றது.
உலகம் முழுவதும் உள்ள உயிர்க்கோள இருப்புகளை (Biosphere Reserve) பாதுகாக்க மனிதன் மற்றும் உயிர்கோளத் திட்டத்தை (MAB – Man and Biosphere Programme) யுனெஸ்கோ செயல்படுத்தி வருகிறது.