ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) ஆனது ஜூலை மாதத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய உள்ளதாக அறிவித்தது.
யுனெஸ்கோ அமைப்பானது, இஸ்ரேன் நாட்டிற்கு எதிரான சார்பினைக் கொண்டு உள்ளதாகக் குற்றம் சாட்டி, பின்பு அந்த முகமையினை விட்டு இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் விலகிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அது மீண்டும் இணைய உள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் மத்தியில், இந்த அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நடவடிக்கை மீதான ஒரு வாக்கெடுப்பானது மேற்கொள்ளப் படும்.
யுனெஸ்கோவின் கொள்கை வகுக்கும் செயல்முறையில், அமெரிக்கா விட்டுச் சென்ற இடைவெளியை சீனா ஆக்கிரமித்ததன் காரணமாக, இந்த அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
முன்னதாக 1984 ஆம் ஆண்டில் ரொனால்டு ரீகன் ஆட்சியின் கீழ் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா 2003 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் கீழ் மீண்டும் இணைந்தது.