அமெரிக்காவை தொடர்ந்து யுனெஸ்கோ அமைப்பிலிருந்து (UNESCO) வெளியேறுவதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அரசு தாக்கல் செய்துள்ளது.
1949 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் யுனெஸ்கோவில் உறுப்பினராக உள்ளது.
மவுண்ட் கார்மேல்லில் உள்ள மனித பரிணாம வளர்ச்சியின் தளங்கள் (Human Evolution Sites), டெல் அவிவ் வெள்ளை நகரம் உட்பட மொத்தம் ஒன்பது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இஸ்ரேலில் உள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்து டிசம்பர் 31, 2018 அன்று முடிவுக்கு வரும்.