TNPSC Thervupettagam

யுனெஸ்கோ கல்வி அறிக்கை

December 16 , 2020 1363 days 833 0
  • யுனெஸ்கோவானது ‘2020 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான கல்வியின் நிலை குறித்த அறிக்கை : தொழில்சார் கல்வி முதலில்’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் யுனெஸ்கோ புது தில்லியின் முதன்மை அறிக்கைகளில் ஒன்றாகும்.
  • இதன் முக்கிய நோக்கம் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் உள்ள கல்வி இலக்குகளை நோக்கிய செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகும்.
  • இந்த அறிக்கையின் 2வது பதிப்பானது தொழில்நுட்பக் கல்வி, தொழில்சார் கல்வி மற்றும் தொழில்நுட்பப்  பயிற்சியின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • தேசிய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவுக் கொள்கையானது 2022 ஆம் ஆண்டில் 150 மில்லியன் இந்திய மக்களுக்கு திறன் அளிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • இந்தக் கொள்கையானது 2015 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்