TNPSC Thervupettagam

யுனெஸ்கோ குழுவின் உறுப்பினர் பதவி

July 14 , 2022 738 days 343 0
  • வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் 2003 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் அரசுகளுக்கிடையேயான குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் அரசுகளுக்கிடையேயான குழுவானது 24 உறுப்பினர்களை உள்ளடக்கியது.
  • இந்தியா 2022 முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் இதன் உறுப்பினராக இருக்கும்.
  • இதற்கு முன்னதாக, இந்தியா 2006-2010 மற்றும் 2014-2018 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தது.
  • "வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கச் செய்வதற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின்"  முக்கியச் செயல்பாடுகள் பின்வருமாறு
    • உடன்படிக்கையின் நோக்கங்களை ஊக்குவித்தல்
    • சிறந்த நடைமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குதல்
    • வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்