TNPSC Thervupettagam

யுனெஸ்கோ சர்வதேச எழுத்தறிவு பரிசுகள் 2017

September 5 , 2017 2671 days 921 0
  • கல்வித் துறையில் புத்தாக்கம் செய்பவர்களுக்கும் , சிறப்பாக செயல்படுபவர்களுக்கும் 1967 ஆம் ஆண்டு முதலாக, யுனெஸ்கோ சர்வதேச எழுத்தறிவுக்கான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது இரண்டு யுனெஸ்கோ எழுத்தறிவு பரிசுகள் வழங்கபடுகின்றன,
  1. யுனெஸ்கோ செஜோங் அரசர் எழுத்தறிவுப் பரிசு (The UNESCO King Sejong Literacy Prize)
  2. யுனெஸ்கோ கன்பியூசியஸ் எழுத்தறிவுப் பரிசு (The UNESCO Confucius Prize for Literacy )
  1.யுனெஸ்கோ செஜோங் அரசர் எழுத்தறிவுப் பரிசு (The UNESCO King Sejong Literacy Prize)
  • கொரிய குடியரசின் ஆதரவுடன் 1989 ஆம் ஆண்டு இப்பரிசு நிறுவப்பட்டது. தாய்மொழிக் கல்விக்கு உதவுபவர்களுக்கு இவ்விருது முன்னுரிமை அளித்து அங்கீகரிக்கிறது .
  • 2017 ஆம் ஆண்டின் விருதுக்கு தேர்வானவர்கள்:
  1. கற்றல் மற்றும் செயல்திறன் ஆய்வு மையம் – கனடா (Centre for the Study of Learning and Performance – Canada)
  2. நாங்கள் வாசிப்பை காதலிக்கிறோம் – ஜோர்டான் (We Love Reading – Jordan)
2.யுனெஸ்கோ கன்பியூசியஸ் எழுத்தறிவுப் பரிசு (The UNESCO Confucius Prize for Literacy )  
  • சீன மக்கள் குடியரசின் ஆதரவுடன் 2005 ஆம் ஆண்டில் எழுத்தறிவுக்கான யுனெஸ்கோ கன்ஃபூசியஸ் பரிசு நிறுவப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள பெரியவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத  இளைஞர்கள் , குறிப்பாக பெண்களிடையே காணப்படும் பகுத்தறிவினை அங்கீகரித்து பாராட்டும் விதத்தில் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டின் விருதுக்கு தேர்வானவர்கள் / தேர்வான அமைப்புகள்:
  1. AdulTICo திட்டம் – கொலம்பியா
  2. குடிமக்கள் அறக்கட்டளை – பாகிஸ்தான்
  3. FunDza – தென் ஆப்ரிக்கா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்