TNPSC Thervupettagam
April 2 , 2018 2331 days 745 0
  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவினுடைய (National Council of Educational Research and Training-NCERT)  முன்னாள் இயக்குநரான, பேராசிரியர்S ராஜ்புட் அவர்களை மத்திய அரசானது யுனெஸ்கோவினுடைய  நிர்வாகக் குழுவிற்கான இந்தியாவின் பிரதிநிதியாக நியமனம் செய்துள்ளது.
  • 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரைக்கான யுனெஸ்கோவினுடைய நிர்வாகிகள் குழுவினுடைய உறுப்பினர் பதவிக்கு தேர்தல் ஆனது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற்றது.
  • 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 14 வரை நடைபெற்ற யுனெஸ்கோ அமைப்பின்  39-வது பொதுக் கருத்தரங்கு சந்திப்பின் போது குரூப் IV பிரிவில் இந்தியா 162 வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளது.

  நிர்வாகக்  குழு

  • 58 இடங்களைக் கொண்டுள்ள யுனெஸ்கோவினுடைய நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் 4 ஆண்டுகளாகும்.
  • யுனெஸ்கோவின் முக்கிய அரசியலமைப்பு அங்கங்களுள் (Constitutional organs) ஒன்றான நிர்வாகக் குழுவானது பொதுக் கருத்தரங்கு அவையினால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  • இது யுனெஸ்கோவினுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனை த்திற்கும் பொறுப்புடைய முக்கிய அங்க அமைப்பாகும்.
  • இக்குழுவானது யுனெஸ்கோவினுடைய செயல்பாடுகள் மற்றும் யுனெஸ்கோவினுடைய பட்ஜெட் மதிப்பீடுகளை (budget estimates) ஆராய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்