செறிந்த வளமான இசைப் பாரம்பரியம் கொண்டு விளங்குவதன் காரணமாக சென்னை நகரமானது யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் (UNESCO’S Creative Cities Network) சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் இசைக்கு அதிகப் பங்களிப்பு அளிக்கும் 44 நாடுகளின் 64 நகரங்கள் இதுவரை அங்கீகரிக்கப்பட்டு இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மூன்றாவது இந்திய நகரமாகும். இதற்கு முன்பு ஜெய்ப்பூர், வாரணாசி போன்ற நகரங்கள் கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்டன.
இப்பட்டியலில் ஜெய்ப்பூர் இசைக்கான நகரம் எனவும், வாரணாசி கைவினை மற்றும் நாட்டுப்புற கலைகளின் நகரமாகவும் பட்டியலிப்பட்டுள்ளன.
நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான உத்திசார் காரணியாக அடையாளம் காணப்பட்ட நகரங்களுடனும், அந்நகரங்களுக்கு இடையேயும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோவினால் 2004 ஆம் ஆண்டு படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியல் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு சென்னையுடன் சேர்ந்து, சிறப்பான உணவியற் சமையற்கலை பாரம்பரியத்திற்காக இத்தாலியன் ஆல்பா நகரமும், இசைக்கான பங்களிப்பு பிரிவில் கஜகஸ்தானின் அல்மதி நகரமும், நியூசிலாந்தின் ஆக்லாந்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நகரங்களின் சேர்ப்போடு தற்போது மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
உணவியற் சமையல்கலை, இசை, கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை, ஊடகக் கலை, வடிவமைப்பு, திரைப்படம் மற்றும் இலக்கியம் எனும் ஏழு களங்களில் படைப்பாற்றலுடைய நகரங்கள் இந்தப்பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.