யுனெஸ்கோ/எமிர் ஜாபர் அல் அகமது அல் ஜாபர் அல் சாபாக் விருது
December 8 , 2018 2334 days 680 0
மாற்றுத் திறனாளிகளின் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக யுனெஸ்கோ/எமிர் ஜாபர் அல் அகமது அல் ஜாபர் அல் சாபாக் விருதானது,
வாஸ்கர் பட்டாசார்ஜி - வங்க தேசத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வழக்குரைஞர்
டென்செண்ட் - சீனாவைச் சேர்ந்த தனியார் துறை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம்
ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத் திறன் குறித்த தகவல் மற்றும் அறிவை அணுகுவதற்காக தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளின் மூலம் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தியதற்கு தலைசிறந்த பங்களிப்பை இவர்கள் ஏற்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதானது 2018/2019 மற்றும் 2020/2021 ஆகிய இரண்டு ஆண்டு காலங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இவ்விருதானது,
தனிநபர் மற்றும்
நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தனிநபர் பிரிவில் வாஸ்கர் பட்டாசார்ஜிக்கும், நிறுவனங்களுக்கான பிரிவில் டென்சென்ட் நிறுவனத்திற்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குவைத் நாட்டினால் மறைந்த ஆட்சியாளரான ஜாபர் அல் அகமது அல் சாபாக் என்பவரது நினைவாக வழங்கப்படுகிறது.