யுனெஸ்கோவினுடைய நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான தேர்தல் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்ட யுனெஸ்கோவின் 39 வது கூட்டத்தில் நடைபெற்றது.
நிர்வாகிகள் குழுவானது யுனெஸ்கோவின் உச்ச முடிவு எடுக்கும் அமைப்பாகும்
யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பு நாடுகளினுடைய பிரதிநிதிகள் யுனெஸ்கோவினுடைய பொது அவை மாநாட்டில் பங்கேற்பர். இப்பொது மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படும்.
இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளும், இணை உறுப்பு நாடுகளும் அவற்றோடு உறுப்பினரல்லாத நாடுகளும், நாடுகளுக்கிடையேயான அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பங்கேற்கும்.