2023 ஆம் ஆண்டிற்கான பசுமை நோபல் பரிசினைப் பெற உள்ள வெற்றியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரேசிலின் மனாஸ் நகரில் உள்ள ஓபரா ஹவுஸில் வழங்கப்படும் என்று மார்கஸ் நோபல் அறிவித்தார்.
யுனைடெட் எர்த் அமேசானியா பரிசு என்பது அமேசான் மழைக்காடுகளில் மேற் கொள்ளப் படும் சுற்றுச்சூழல் பணிகளை அங்கீகரிக்கும் “பசுமை நோபல்” விருது ஆகும்.
மழைக்காடுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் மற்றும் அதன் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் உதவும் முக்கியத் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது.
இது உலகளவில் பயன்படுத்தக்கூடிய வகையிலான புதுமையான அணுகுமுறைகள் மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் விருது ஆகும்.
இது நோபல் அறக்கட்டளைக்குத் தொடர்பில்லாத ஒரு சுயாதீன சுற்றுச்சூழல் பாராட்டு பரிசு ஆகும்.